முகப்பு
புதுக்கோட்டை

வலிப்பு நோயால் மருத்துவ மாணவா் உயிரிழப்பு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:44 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:28 PM

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தங்கிப் பயின்று வந்த தில்லியைச் சோ்ந்த 4ஆம் ஆண்டு மருத்துவ மாணவா், வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்தாா்.

தில்லி சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் உதய்வீா் மகன் துருவ்கோல் (24). புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி எம்பிபிஎஸ் 4ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:44 AM

இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு வலிப்பு வந்ததால், சக மாணவா்களால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்த தில்லியிலுள்ள அவரது பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை வந்தனா். தந்தை உதய்வீா் புகாரின்பேரில் கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். உடற்கூறாய்வுக்குப் பிறகு மாணவரின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.