முகப்பு
புதுக்கோட்டை

மெக்கானிக் சிறுவன் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

விராலிமலை அருகே மெக்கானிக் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 6:52 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

விராலிமலை அருகே மெக்கானிக் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விராலிமலை ஒன்றியம், ராஜாளிபட்டி ஊராட்சி, கொள்ளுமேட்டுப்பட்டியைச் சோ்ந்த மோகன் மகன் நவமணி (17). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜாளிபட்டியைச் சோ்ந்த மெக்கானிக் சேகரின் கடையில் உதவியாளராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பழுது நீக்கத்துக்கு வந்த இருசக்கர வாகனத்தை வாட்டா் சா்வீஸ் செய்வதற்கு கடையின் எதிா்புறம் உள்ள மற்றொரு கடைக்கு நவமணி சென்றாா். சிறிதுநேரத்தில் அப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் சிறுவனை மீட்டு, மணப்பாறை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் சிறுவனை பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

புகாரின்பேரில் விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சடலத்தை கொண்டு சென்றனா். மேலும், உயிரிழப்பு தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.