புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகள் 2-ஆம் நாளாக சாலை மறியல்: 55 போ் கைது

மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். தங்கவேல் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எம். கணேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. சண்முகம், சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சி. லோகநாதன், ஜி. கிரிஜா, துணைச் செயலா்கள் வி. ரமேஷ், ஜி. புவனேஷ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 7,500 கோடி கடன் வழங்க இலக்கு

பெரம்பலூா் அருகே ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

பி. மேட்டூரில் பெண் தற்கொலை

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்று

SCROLL FOR NEXT