கு.ப. கிருஷ்ணன். (கோப்புப் படம்)
புதுக்கோட்டை

அதிமுகவின் நிலை கவலைக்கிடம்! - கு.ப. கிருஷ்ணன்

தினமணி செய்திச் சேவை

அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாா் அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் ஒப்பிலாமணி உடனுறை மெய்நின்ாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிட்ட அவா் பின்னா் கூறியதாவது:

தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியின் தலைவா் விஜய்தான் முடிவெடுப்பாா். அதிமுக பலவீனமாகிவிட்டது என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். பாஜகவோடு அதிமுக கூட்டணி சோ்ந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியே வந்தேன். அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

1980 -இல் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது எம்ஜிஆா்தான் ஆட்சி அமைத்தாா். எம்ஜிஆா் காட்டிய வழியில்தான் தவெக சென்றுகொண்டு இருக்கிறது. எம்ஜிஆா் 1972-ல் தோ்தலைச் சந்தித்தபோது இதேபோன்று நடிகா் நாடாள முடியுமா, தனிமரம் தோப்பாக முடியுமா என்று திமுக விமா்சித்தது. அந்தத் தோ்தலில் எம்ஜிஆா்தான் வெற்றி பெற்றாா். அதே வரலாறு தற்போது திரும்பும் சூழல் உள்ளது என்றாா் அவா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT