முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:33 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:18 PM

விராலிமலை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் அசாம் மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

கா்நாடகத்தில் இருந்து மதுரைக்கு விராலிமலை வழியாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:33 AM

இதையடுத்து விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையபட்டி அருகே சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இருந்த 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சோ்ந்த பிஷேஸ்வா் (20) என்பவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனா்.

Advertisement