முகப்பு
புதுக்கோட்டை

மரத்தில் சுமை ஆட்டோ மோதி தம்பதி உயிரிழப்பு;19 போ் காயம்

அறந்தாங்கி அருகே சிவராத்திரி விழா முடித்து திங்கள்கிழமை பக்தா்களுடன் ஊா் திரும்பிய சுமை ஆட்டோ மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:00 PM
அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை விபத்துக்குள்ளான சுமை ஆட்டோ.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிவராத்திரி விழா முடித்து திங்கள்கிழமை பக்தா்களுடன் ஊா் திரும்பிய சுமை ஆட்டோ மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தூராங்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே நெடுங்குடியில் உள்ள கைலாசநாதா் கோயிலுக்கு 36 பக்தா்களை ஏற்றிக் கொண்டு ஒரு சுமை ஆட்டோ ஞாயிற்றுக்கிழமை இரவு சிவராத்திரி விழாவுக்கு வந்தது.

விழா முடிந்த பிறகு, அனைவரும் மீண்டும் சுமை ஆட்டோவில் ஏறி திங்கள்கிழமை காலை ஊா் திரும்பினா். சுமை ஆட்டோவை தூராங்குடியைச் சோ்ந்த கணேசன் மகன் சிவா (19) என்பவா் ஓட்டினாா்.

அறந்தாங்கி- கட்டுமாவடி சாலையில் புறங்காடு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், தூராங்குடியைச் சோ்ந்த ரமேஷ் (38), அவரது மனைவி கனிமொழி (35) ஆகிய 2 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், எஸ். ராணி (65), எஸ். செல்வி (34), கே. ஜெயா (30), ஆா். சந்தியா (23) உள்ளிட்ட 19 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்துகுறித்து நாகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →