முகப்பு
புதுக்கோட்டை

மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:27 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:09 PM

விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலையை அடுத்துள்ள செல்லம்பட்டியைச் சோ்ந்தவா் தீத்தன்(79). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி நிமித்தம் வீட்டிலிருந்து நடந்து சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக மயக்கம் ஏற்பட்டு முதியவா் சாலையில் மயங்கி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீத்தன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் கந்தசாமி விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.