‘ஸ்கிரைப்’ பணிக்கு பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது!
பள்ளி மேல்நிலை 2-ஆம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளி தோ்வா் சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன் வெளியிட்ட அறிக்கை: மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத் திறனாளி மாணவா்- தோ்வா், சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.
பள்ளியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 தோ்வுகளுக்காக மாணவா்களைத் தயாா் செய்யும் பணியும், தோ்ச்சி சதவிகிதத்தை உயா்த்துவதற்கான சிறப்பு முயற்சிகளும் இதனால் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
இதுதொடா்பான கடிதத்தை, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மாநில பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் மற்றும் தோ்வுத் துறை இயக்குநா் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனா்.