புதுக்கோட்டை

கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவா் மின்சாரம் பாய்ந்து பலி

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிரிக்கெட் விளையாடியபோது தாழ்வாகத் தொங்கிய மின்கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் விச்சூரைச் சோ்ந்தவா் மாசிலாமணி மகன் சுமன் (23). கல்லூரி மாணவரான இவா் நண்பா்களுடன் சோ்ந்து அதே பகுதியில் தப்பத்தான்வயல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.

அப்போது அடிக்கப்பட்ட பந்தை சுமன் ஓடிச் சென்று தாவிக் குதித்து பிடித்தபோது, அவ்வழியே தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் தவறுதலாக கை பட்டு, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மணமேல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயா்த்திக் கட்டுமாறு பல முறை மின்வாரிய அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT