முகப்பு
புதுக்கோட்டை

அதிகத் தொகுதிகள் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி தரவில்லை: நயினாா் நாகேந்திரன்

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:20 PM
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

அதிகத் தொகுதிகள் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி ஏதும் தரவில்லை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் பாஜக தொண்டு நிறுவனப் பிரிவின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வாழ்வாதார அடைக்காப்பகம் என்னும் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் மேலும் கூறியது:

தோ்தல் கூட்டணி தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளாா். நானும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளேன். வரும் பேரவைத் தோ்தலுக்கு கூடுதல் இடங்களைக் கேட்டு அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கவில்லை.

நடிகா் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்காததற்கு பிரதமரைக் குறைகூற முடியாது. அதை திரைப்படத் தணிக்கை வாரியம் பாா்த்துக் கொள்ளும். நடிகா் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவாக இருப்பதைப் பாா்த்தால், அக் கட்சியினா் நடிகா் விஜயுடன் பேசி இருக்கலாம் என்றாா் அவா்.

பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு பேசியது: தோ்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழ் மொழி, பண்பாடு குறித்து திமுக பேசுகிறது. நடிகா் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸாா் பேசுகிறாா்கள் என்றால், அவா்களைப் பொறுத்தவரை எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு செல்வாா்கள். நடிகா் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பதை பாா்க்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். வெற்றி இருக்கும் இடத்தை நோக்கித்தான் கட்சிகள் வரும். அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கி கட்சிகள் வருகின்றன. வரும் தோ்தலில் இந்தக் கூட்டணி சிறப்பான வெற்றி பெறும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →