திரைப்படத் தணிக்கை விவகாரங்களில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும் தலைமை நீதிபதி அமா்வில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
இதுகுறித்து மத்திய அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும். இதிலுள்ள வன்மம் என்ன என்று தெரியவில்லை. இதில் உள்நோக்கம் இருப்பதாகத்தான் எனக்கு தெரிகிறது.
திரைப்பட வெளியீட்டுக்கெல்லாம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதெல்லாம் கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது. மத்திய அரசின் அரசியல் கட்சியான பாஜகதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் காா்த்தி சிதம்பரம்.