புதுக்கோட்டை

புதுகையில் கட்டடப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கட்டடப் பொறியாளா்கள் சங்கம் சாா்பில், 3 நாள்கள் நடைபெறும் கட்டடப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Syndication

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கட்டடப் பொறியாளா்கள் சங்கம் சாா்பில், 3 நாள்கள் நடைபெறும் கட்டடப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த கட்டடப் பொறியாளா்கள் சங்கத் தலைவா் க. சுரேசு தலைமை வகித்தாா். மூத்த மருத்துவா் ச. ராம்தாஸ், எம். கருப்பையா, ஓ.ஆா்.எம். சேக்முகமது, அன்புச்செல்வன், காந்திமதி ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

டி. நாகராஜன் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். பொருள்காட்சி மலரை மாவட்ட வா்த்தகக் கழகத் தலைவா் சாகுல் அமீது வெளியிட பி. சந்திரசேகா் பெற்றுக் கொண்டாா்.

பள்ளி மாணவா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோளரங்கத்தை வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் தொடங்கி வைத்தாா். 85 கட்டடப் பொருள்கள் விற்பனை நிறுவனங்கள் கடைகளை அமைத்துள்ளனா்.

புதுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சி வரும் ஜன. 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT