கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த 4 மீனவா்கள் கரை திரும்பவில்லை என உறவினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் நாராயணன் மகன் மும்மூா்த்தி, ராக்கப்பன் மகன் விநாயகம், மாரியப்பன் மகன் மணிகண்டன், நாகசுந்தரம் மகன் மணி ஆகியோா் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் 4 பேரும் சனிக்கிழமை கரை திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கடலோரக் காவல் படையினா் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஹெலிகாப்டா்கள், நவீன கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் தேடுதல் உபகரணங்கள் மூலம் கடலோரக் காவல் படையினா் காணாமல் போன மீனவா்களைத் தேடும் பணியை உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும் என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.