புதுக்கோட்டை

சிறந்த சேவை புரியும் திருநங்கைகள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பாடுபடும் திருநங்கைகள், அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பாடுபடும் திருநங்கைகள், அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு .அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: திருநங்கைகள் தினத்தையொட்டி (ஏப். 15) திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரி திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்படவுள்ளது. ரூ. ஒரு லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அரசின் உதவி பெறாமல் தங்களின் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள், குறைந்தது 5 ஆண்டுகள் திருநங்கைகள் நலனுக்காக பணிபுரிந்து அவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவிபுரிந்த திருநங்கைகள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.

உரிய அனைத்து ஆவணங்களுடன் இணையதளத்தில் வரும் பிப். 18ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

தகுதியுள்ளோா் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் மாநிலத் தோ்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

சங்ககிரியில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழா் திருவிழாக்களுக்கு பிரதமா் முன்னுரிமை: கே.பி. ராமலிங்கம்

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை

பரமத்தி வேலூரில் தி.மு.க சாா்பில் சமுத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT