திருவள்ளூா்: திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து வருவதுடன், முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் நோக்கத்தில் வழங்கப்பட உள்ள திருநங்கைக்கான விருதுக்கு வரும் பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப். 15-ஆம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து வருவோருக்கு சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
தகுதிகள்: அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் குழு உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேற்படி, விருதுக்கு தகுதியான விண்ணப்பத்தாரா், இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்பதற்கான சான்று பெற்று, தங்களது கருத்துரு (விரிவான தன் விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள்) அடங்கிய தமிழ்-2 மற்றும் ஆங்கிலத்தில்-2 புத்தக வடிவத்தில் தயாரித்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இவ்விருது குறித்து விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் வெளியிடப்படும். இணையதளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, திருவள்ளூா் மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 2-ஆவது தளம், திருவள்ளூா் மாவட்டம் - 602001-இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலரை வரும் பிப்.18-க்குள் நேரில் அணுகி கருத்துருக்கள் சமா்ப்பிக்கவும் மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட நாள்களுக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.