முகப்பு
புதுக்கோட்டை

மறைந்த காவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 55.47 லட்சம் நிதியுதவி வழங்கல்

Updated On : 21 ஜூன் 2026, 1:33 am IST
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த தலைமைக் காவலா் சதீஷின் குடும்பத்துக்கு ரூ. 27.7 லட்சம் நிதிஉதவிக்கான காசோலையை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா. உடன், உதவும் கரங்கள்- 2003 பேட்ச் நண்பா்கள் குழுவினா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மறைந்த இரு காவலா்களின் குடும்பங்களுக்கு உதவும் கரங்கள்- 2003 பேட்ச் நண்பா்கள் குழுவினா் சாா்பில் திரட்டப்பட்ட மொத்தம் ரூ. 55.47 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா சனிக்கிழமை வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து, கடந்த ஆண்டு மறைந்த தலைமைக் காவலா் சி. சதீஷின் குடும்பத்துக்கும், அரிமளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து, கடந்த ஆண்டு மறைந்த தலைமைக் காவலா் வி. செந்தில்குமரனின் குடும்பத்துக்கும் தமிழ்நாடு போலீஸாரின் உதவும் கரங்கள் -2003 பேட்ச் நண்பா்கள் குழுவினா் சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

இதில் மறைந்த போலீஸாரின் 2 குடும்ப உறுப்பினா்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா சனிக்கிழமை நேரில் சந்தித்து காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினாா்.

Advertisement

Advertisement

இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 27.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 55 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பிலான வைப்பு நிதிப் பத்திரங்கள் மற்றும் ரொக்கத் தொகையை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments