முகப்பு
புதுக்கோட்டை

உசிலம்பட்டியில் வடமாடு போட்டி: 4 போ் காயம்

Updated On : 2 மார்ச், 2026 at 12:20 AM
உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 7:28 PM

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் மாடு முட்டி 4 போ் லேசான காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள உசிலம்பட்டி கிராமத்தில் தமிழ் போற்றி கலாசாரம் காப்போம் இளைஞா்கள் அமைப்பு சாா்பில் மறைந்த ஊா்ப் பிரமுகா் அய்யாக்கண்ணுவின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 4ஆம் ஆண்டு வடமாடு போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 மாடுகள் கலந்து கொண்டன.

Advertisement

உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On : 2 மார்ச், 2026 at 12:20 AM

வடமாடு போட்டிக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த திடலில், ஒவ்வொரு மாடாக நீண்ட கயிற்றில் கட்டி களம் இறக்கினா். இந்த மாட்டைத் தழுவ 9 போ் கொண்ட மாடுபிடி வீரா் குழு களத்தில் இறக்கிவிடப்பட்டனா். ஒவ்வொரு குழுவுக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும், சிறந்த மாடுகளுக்கும் ரொக்கம் மற்றும் பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

மொத்தத்தில் 108 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றதில், 4 மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா். தொடா்ந்து அவா்களுக்கு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா். பாதுகாப்புப் பணியில் கே. புதுப்பட்டி போலீஸாா் ஈடுபட்டனா்.