பொன்னமராவதி டிஎஸ்பி பொறுப்பேற்பு
Updated On : 5 மார்ச், 2026 at 8:09 PM
பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பி. சரவணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பி. தங்கராமன் பணிமாறுதல் பெற்று கும்பகோணம் சென்ற நிலையில், அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பி. சரவணன் இங்கு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவருக்கு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.