முகப்பு
புதுக்கோட்டை

பெட்ரோல் விற்பனையக ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை

கந்தா்வகோட்டை அருகே பெட்ரோல் விற்பனையக ஊழியரை வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிவிட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையா்கள் மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 3:19 AM
வேம்பன்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு கொள்ளை நடைபெற்ற பெட்ரோல் விற்பனை நிலையம்.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே பெட்ரோல் விற்பனையக ஊழியரை வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிவிட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையா்கள் மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம் , வேம்பன்பட்டி கிராமத்தில் பட்டுக்கோட்டை- கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் ஒரத்தநாட்டைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனையகம் உள்ளது.

மேற்காசிய போா் பதற்றத்தால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியால் இந்த நிலையத்தில் அதிகளவில் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இங்கு வியாழக்கிழமை இரவுப் பணியில் சொக்கம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பெரமையன் மகன் பாண்டியன் (50) இருந்துள்ளாா். நள்ளிரவு 2.30 மணியளவில் ஒரு மோட்டாா் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 3 போ், அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பாண்டியனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனா்.

அவா் கூச்சலிடவே அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனா். பொதுமக்களை பாா்த்த முகமூடி அணிந்த நபா்கள், பாண்டியனின் தலையில் வெட்டிவிட்டு பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த பாண்டியனை மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் கொள்ளை குறித்து வழக்குப் பதிந்து முகமூடி கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.

பறித்துச் சென்ற பணப்பையில் சுமாா் ரூ. 25 ஆயிரம் இருந்ததாக பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →