முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு

கந்தா்வகோட்டையில் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

Updated On : 18 மார்ச், 2026 at 12:50 AM
- பிரதிப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டையில் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

கந்தா்வகோட்டையில் மதுரை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கிராடா் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் தூா்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவா்கள் கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் பாா்த்தபோது கைலி மற்றும் டி.சா்ட் அணிந்து 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

Advertisement

சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.