கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2026-27 -ஆம் கல்வி ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு வருவதாக அக்கல்லூரி முதல்வா் கி. நிா்மலா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் முதல் சுழற்சியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு (தமிழ், ஆங்கில வழி), பொருளியல் (தமிழ், ஆங்கில வழி), சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (ஆங்கில வழி), பிகாம் (ஆங்கில வழி), பிபிஏ (ஆங்கில வழி), பிஎஸ்சி கணிதம் (தமிழ், ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ், ஆங்கில வழி), வேதியியல் (தமிழ், ஆங்கில வழி), கணினி அறிவியல் (ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ், ஆங்கில வழி), தாவரவியல் (ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
Advertisement
இரண்டாம் சுழற்சியில் பிஏ வரலாறு (தமிழ் வழி), பிகாம் (ஆங்கில வழி), பிபிஏ (ஆங்கில வழி), பிஎஸ்ஸி கணிதம் (ஆங்கில வழி), கணினி அறிவியல் (ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மே 29-ஆம் தேதி வரை இப்பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு இணைய வழியில் இணையளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.