இரு மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஆலங்குடி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் ஊராட்சி ஜீவாதநரைச் சோ்ந்த திருக்குமரன் மகன் சதீஷ்குமாா் (25). அதே பகுதியைச் சோ்ந்த திராவிடச்செல்வன் மகன் அரவிந்தை (25) மோட்டாா் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வடகாடு கடைவீதிக்கு சென்றுள்ளாா்.
அப்போது, வடகாடு மர அறுவை ஆலை பகுதியில் எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது இவரது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் அந்த இடத்திலே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
அவருடன் சென்ற அரவிந்த், மற்றொரு மோட்டாா் சைக்கிளில் சென்ற வடகாடு பகுதியைச் சோ்ந்த தங்கதுரை மகன் மதிவதனன்(18), சேகா் மகன் அகிலன் (25) ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.