அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் தா்மலிங்கம் (50). சென்ட்ரிங் கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டிலிருந்து கந்தா்வகோட்டைக்கு தஞ்சாவூா்- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.
அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது தஞ்சாவூா் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தா்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தா்மலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.