முகப்பு
தஞ்சாவூர்

கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்

Updated On : 12 மே 2013, 6:28 am IST
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் தலைவர், துணைத் தலைவர் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சை நகரில் கரந்தை திராவிடன் கூட்டுறவு நகர வங்கி, நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி, சண்முகா நகர் கூட்டுறவு கட்டட சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழக அலுவலர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் அதிமுக தொகுதிச் செயலர் துரை. திருஞானம், வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் ஏ.ஜி. தங்கப்பன், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், மாவட்ட மாணவரணி செயலர் ஆர். காந்தி, மாவட்ட இளைஞரணி செயலர் ஜயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.