முகப்பு
தஞ்சாவூர்

"வள்ளலார் கோட்பாடுகள் சமுதாயத்துக்கு தேவை

வள்ளலாரின் கோட்பாடுகள் சமுதாய நிலையில் தேவையாக இருக்கிறது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

Updated On : 26 செப்டம்பர், 2015 at 4:17 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:18 PM

வள்ளலாரின் கோட்பாடுகள் சமுதாய நிலையில் தேவையாக இருக்கிறது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, அவர் பேசியது:

சைவ சித்தாந்தத்தின் சரியை, சிரியை, ஞானம் என்ற மார்க்கங்களான நெறிகள் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்வதற்கான படி நிலைகள். அதில் ஒன்றுதான் ஞானம். அதுவே சன்மார்க்கம். அதை அடிப்படையாகக் கொண்ட வள்ளாலருடைய கோட்பாடுகள் தத்துவ நிலையிலும், சமுதாய நிலையிலும், ஆன்மீக நிலையிலும் சிறப்பாக இருக்கிறது.

Advertisement

வள்ளலாருடைய தத்துவம்தான் சாதி, சமயம் எல்லாவற்றையும் கடந்த ஒன்றாக எல்லோரையும் ஒருங்கிணைந்து சொல்கிற ஒரு இயக்கமாகவே இருந்து வருகிறது.

சன்மார்க்கம் என்பது இந்த சமுதாயத்துக்கு இன்றைய நிலையிலேயே வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இன்று வள்ளாலருடைய கோட்பாடுகள் சமுதாய நிலையிலேயே மிகவும் தேவையாக இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்த காரணத்தினால்தான் இன்று வள்ளலாரின் அன்பர்கள் கூட்டம் நிரம்ப இருக்கிறது. சமுதாய நிலையிலேயே மக்களை ஒருங்கிணைகத்து சாதி, வேறுபாடுகளையெல்லாம் அகற்றி, புற வழிபாடுகளையயெல்லாம் மறுத்து இதுதான் உண்மை, இந்த உண்மையை கண்டறிந்த போதும் புறத்தே சென்று தேடவேண்டியதில்லை என ஆணித்தரமாக வலியுறுத்தி நம்மை உணரச் செய்ய வைத்தவர் வள்ளல் பெருமான் என்றார் பாஸ்கரன்.மேட்டுக்குப்பம் ராமலிங்க வள்ளலார் அறக்கட்டளை கோவை சிவப்பிரகாச சுவாமிகள் சிறப்புரையாற்றினார்.முன்னதாக, துறைத் தலைவர் ஜெ. அரங்கசாமி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.