யூத் லீக் சாம்பியனை வென்ற ரியல் மாட்ரிட்!
யூத் லீக் சாம்பியன் இறுதிப் போட்டியில் வென்ற ரியல் மாட்ரிட் அணி குறித்து...
ஐரோப்பாவில் நடைபெறும் யூத் சாம்பியன் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி பெனால்டியில் வென்றது. இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக இந்தக் கோப்பையை ரியல் மாட்ரிட் வென்றுள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் சீனியர் அணி 15 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேபோல் இளைஞர்களுக்கான யு19 போட்டியில் ரியல் மாட்ரிட் ஆதிக்கம் செலுத்த வருகிறது.
யுஇஎஃப்ஏ யூத் லீக் சாம்பியன்ஸிப்பில் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் ஜுவைனல் ஏ அணியும் கிளப் ப்ரூஜ் யு19 அணியும் மோதின.
Advertisement
இந்தப் போட்டியில் 23ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் அணியும் 64ஆவது நிமிஷத்தில் கிளப் ப்ரூஜ் அணியும் கோல் அடித்தன. அதனால், ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது.
பெனால்டியில் 4-2 என ரியல் மாட்ரிட் வென்றது. 12 ஆண்டுகால வரலாற்றில் ரியல் மாட்ரிட் தனது இரண்டாவது கோப்பையை வென்றுள்ளது. பார்சிலோனா மூன்று முறை வென்று முதலிடத்தில் இருக்கிறது.