தஞ்சாவூர்

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 61-ஆவது நினைவு நாளை ஒட்டி, தஞ்சாவூரில் புதன்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சாவூர் அருகே உள்ள மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் மாநகர், மாவட்டத் தலைவர்
பி.ஜி. ராஜேந்திரன், பொருளாளர் ஆர். பழனியப்பன், நிர்வாகிகள் ஜேம்ஸ், வேங்கை கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் சொக்கா ரவி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அம்பேதகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் மக்கள்
இயக்கம் சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ். தங்கராசு தலைமையில் மறியலில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் பிச்சைகண்ணு, மாநகர
மாவட்டச் செயலாளர் வி.சி. கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ. பாலையன்
தலைமையில் அச்சங்கத்தினர் அம்பேத்கருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட அமைப்புச் செயலாளர் வெங்கட சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பள்ளத்தூர் போராளி தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் வெற்றி, நிர்வாகிகள் ராஜசேகரன்,
மகேந்திர சோழன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல, மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஏ.எம். ராஜா தலைமையிலான நிர்வாகிகளும்
மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியில் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு துணைவேந்தர் க. பாஸ்கரன், மலர்தூவி மரியாதை செலுத்தினார். விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் து. ரவிக்குமார், பல்கலைக்கழகப் பதிவாளர் ச.முத்துக்குமார், நிதி அலுவலர், துணைப் பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT