தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே "காணாமல் போனதாகக் கூறப்பட்ட கோயில் சிலைகள் பாதுகாப்பாக உள்ளன'

DIN

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட குறிச்சி அமிர்தகடேசுவரர் கோயில் சிலைகள் கும்பகோணம் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக உள்ளன என்றார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்.
பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் தலைவர் பொன் மாணிக்கவேல் கடந்த 2-ஆம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, குறிச்சி ஊராட்சியில் உள்ள அமிர்தகடேசுவரர்
கோயிலின் மகா மாரியம்மன் உள்ளிட்ட சிலைகளைப் பசுபதீசுவரர் கோயிலில் பாதுகாப்பாக வைக்குமாறு சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டதாகவும், அவை தற்போது காணவில்லை எனவும்
கோயில் முன்னாள் அறங்காவலர் குணசேகரன் புகார் செய்தார்.
 இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அச்சிலைகள் கும்பகோணம் நாகேசுவரன் கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில்
இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இம்மையத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், குறிச்சி கோயில் முன்னாள் அறங்காவலர்
குணசேகரன், பொதுமக்கள் உள்ளிட்டோர் குறிச்சி கோயிலுக்குச் சொந்தமான சிலைகளை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,
"குறிச்சி கோயிலுக்குச் சொந்தமான கோயில் சிலைகள் இம்மையத்தில் இருப்பதை பொதுமக்கள் பார்வையிட்டு உறுதி செய்து கொண்டனர். எனவே, இக்கோயிலுக்குரிய சிலைகள் ஏதும் காணாமல்
போகவில்லை' என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT