தஞ்சாவூர்

பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசளிப்பு

DIN

பாபநாசம் வழுத்தூர் செளகத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சரபோஜிராஜபுரம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில்  பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவிற்கு பள்ளி தாளாளர் கே.இ.பி.முகம்மது அலி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முகம்மது மஸ்தான், அப்துல் ரவூப், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஷாஜஹான் வரவேற்றார். விழாவில் கும்பகோணம் சரக கூட்டுறவு கடன் சங்கங்களின் துணை பதிவாளர் இரா.மாரீஸ்வரன், சார்-பதிவாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இப்பள்ளியில் கடந்த 2016-17 ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி பேசினர்.இதில், சங்கச் செயலாளர் டி.கலியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.ஜெய்சங்கர் மற்றும் பள்ளிஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிடோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT