முகப்பு
தஞ்சாவூர்

விராலிமலை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 70 லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 70 லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் விராலிமலை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சு. கணேஷ்  கூறியது:  தொண்டைமாநல்லூரில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.87 ஆயிரத்தில் ஆட்டுக்கொட்டகை கட்டுமானப் பணி, ரூ.1 லட்சத்தில் குப்பை பிரிக்கும் கூடாரம் அமைக்கும் பணி, மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ. 19  லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, குமாரமங்களம் ஊராட்சி, வடுகப்பட்டியில்  வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி அலுவலகக் கட்டுமானப் பணி, மண்டையூர் ஊராட்சி, நத்தக்காடு கிராமத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சத்தில் தார்ச் சாலைப் பணி, நத்தக்காடு, மண்டையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2. 25 லட்சத்தில் ஆண்கள் கழிப்பறை கட்டுமானப் பணி, மண்டையூரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.1. 50 லட்சத்தில் காத்திருப்போர் கொட்டகை கட்டுமானப் பணி, ஊராட்சி மன்றத்தில் நட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகள், சிங்கத்தாகுறிச்சியில் ரூ. 4 லட்சத்தில்  கலையரங்கக் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ.70.87 லட்சத்தில்  மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் ஆட்சியர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் த. சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள் சித்திரவேல், முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →