தஞ்சாவூர்

ஸ்டாலின் கைதைக் கண்டித்து மறியல்: 824 பேர் கைது

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக சார்பில் 22 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 824 பேர் கைது செய்யப்பட்டனர்.

DIN

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக சார்பில் 22 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 824 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில்  திமுக மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம் தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர் சண். ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி, திமுக மாவட்டப் பொருளாளர் எல்.ஜி. அண்ணா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் து. செல்வம், மகளிரணி துணைத் தலைவர் த. காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில்...கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலர் சு. கல்யாணசுந்தரம் தலைமையில், நகரச் செயலர் சு.ப. தமிழழகன் முன்னிலையில் மறியல் செய்தோரையும், தாராசுரம் கடைத்தெருவில் கிழக்கு ஒன்றியப் பொருளாளர் முத்துச்செல்வன் தலைமையில் மறியல் செய்தோரையும், திருவிடைமருதூரில் முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமையில் மறியல் செய்த மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு அமைப்பாளர் நசீர், செயலர்கள் மகாலிங்கம், பஞ்சநாதன், இளங்கோவன் உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை,யில்.. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் திமுக நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இயலரசன், ராமகிருஷ்ணன் உள்பட 18 பேர், மணிக்கூண்டு அருகே ஒன்றியச் செயலர்கள் பார்த்திபன், ராமநாதன் தலைமையில் மறியல் செய்த 10 பேர்  கைது செய்யப்பட்டனர்.
பாபநாசத்தில்... பாபநாசம் ஒன்றிய செயலர் கோ. தாமரைசெல்வன் தலைமையில்,மாவட்டத் துணைச் செயலர் கோ.வி. அய்யாராசு முன்னிலையில் பாபநாசம் ஒன்றிய,நகர திமுக அலுவலகம் எதிரே தஞ்சாவூர் - கும்பகோணம் பிரதான சாலையில் மறியல் செய்தோரை கைது செய்தனர்.
ஒரத்தநாட்டில்.. கிழக்கு ஒன்றியச் செயலர் காந்தி, மேற்கு ஒன்றியச் செயலர் செல்வராசு, நகரச் செயலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் தென்னமநாடு பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபோல மாவட்டத்தில் மொத்தம் 22 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 824 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT