திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் பிரதோச வழிபாடு
பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர்திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் பிரதோச வழிபாடு
பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் உள்ள மூலவர் பாலைவனநாதர், தவளவெண்ணகை அம்மன், விநாயகர், முருகர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தூப, தீப, நெய்வேத்ய வழிபாடுகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து, கோயில் வெளிச்சுற்று பிரகாரத்திலுள்ள நந்தியெம்பெருமானுக்கு மங்கல பொருள்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் கோ. சிவசங்கரி, பாபநாசம் ஆன்மிக பேரவை நிர்வாகிகள் சீனிவாசன், தனபால், அப்பர் சேவாலயம் பரமசிவம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வி.பி.கே.மூர்த்தி, வாய்மை அறக்கட்டளை உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், திருப்பாலைத்துறை உத்திராபதியார் கோவில், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்திலுள்ள அமிர்தவர்ஷினி உடனுறை வருணாசலேஸ்வரர் கோவில், பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்கசுவாமி கோவில் தேவராயன்பேட்டை சுகந்தகுந்தளாம்பிகை உடனுறை மச்சபுரீஸ்வரர் கோவில், நல்லூர் கிரிசுந்தரி சமேத கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்,உத்தாணி கிராமத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நடைபெற்ற பிரதோச வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.