தஞ்சாவூர்

குடந்தையில் புகையிலை விற்பனை: 21 பேர் மீது வழக்கு

DIN

கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக பகுதிகளில்  பொது இடங்களில் புகைபிடித்தவர்கள் மீதும்,  கடைகளில் புகையிலையை விற்பனை செய்தது தொடர்பாக 5 நிறுவனங்கள் உள்பட  21 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக பகுதிக்குட்பட்ட கிழக்கு,  மேற்கு,  தாலுக்கா,  பட்டீஸ்வரம், சுவாமிமலை காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் பொதுமக்கள், பெண்கள், தாய்மார்களுக்கு இடையூறாக புகைபிடித்தவர்கள்,  பள்ளி அருகில் மற்றும் முக்கிய பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 5 நிறுவனங்கள் உள்பட 21 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல்,  கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தினமும் ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என டிஎஸ்பி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT