கூட்டுறவு வார விழா: கும்பகோணத்தில் இலவச மருத்துவ முகாம்
கும்பகோணத்தில் அகில இந்திய 64ஆவது கூட்டுறவு வார விழாவையொட்டி, சந்திரசேகரபுரம் கூட்டுறவு விற்பனை பண்டசாலை சார்பில் இலவச
கும்பகோணத்தில் அகில இந்திய 64ஆவது கூட்டுறவு வார விழாவையொட்டி, சந்திரசேகரபுரம் கூட்டுறவு விற்பனை பண்டசாலை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு சந்திரசேகரபுரம் கூட்டுறவு விற்பனை பண்டகசாலையின் தலைவர் அயூப்கான் தலைமை வகித்தார். மேலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். மேலாண் இயக்குநர் முத்துக்குமார் வரவேற்றார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரமணிதேவி, முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜாநடராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜான், ராமமூர்த்தி, கூட்டுறவு சங்க சார்பதிவாளர்கள் குமார், தாவூத்அலிகான், ராஜேந்திரன், பன்னீர்செல்வம் , இயக்குநர் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், ஈசிஜி, இருதய நோய், கல்லீரல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். நிறைவில் துணை பதிவாளர் மாலீஸ்வரன் நன்றி கூறினார்.