ஐப்பசி அமாவாசை: விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்காரம்
ஐப்பசிமாத அமாவாசையை முன்னிட்டு வறட்சி நீங்கவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் கும்பகோணம் பாலக்கரை காமராஜ்நகர் அருகிலுள்ள
ஐப்பசிமாத அமாவாசையை முன்னிட்டு வறட்சி நீங்கவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் கும்பகோணம் பாலக்கரை காமராஜ்நகர் அருகிலுள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை ஜாங்கிரி அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு வழிபாட்டில் துளசியால்1008 ராமநாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனை செய்து பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து வழிபட்டனர். மேலும் நேர்த்திக் கடனாக மட்டை தேங்காய்களை ஆஞ்சநேயர் காலடியில் வைத்து வழிபட்டனர். ராமன் பட்டாச்சாரியார், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.