முகப்பு
தஞ்சாவூர்

வாகனம் மோதி முதியவர் சாவு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:15 AM
பகிர்:

கும்பகோணத்தில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த மாடாகுடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் பாவாடை (70). இவர் சனிக்கிழமை தனது வீட்டின் அருகிலுள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையை கடந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அப்பகுதியினரால்  மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு இறந்தார்.பட்டீஸ்வரர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.