தஞ்சாவூர்

எம்பி நிதியிலிருந்து  புளியஞ்சேரியில் ரூ. 10 லட்சத்தில் உயர்மின்கோபுரம் திறப்பு

DIN

கும்பகோணம் அருகே புளியஞ்சேரி - திருப்புறம்பியம் சாலையில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்தை மயிலாடுதுறை எம்பி ஆர்.கே. பாரதிமோகன் ஞாயிற்றுக்கிழமை இரவு பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இன்னம்பூர், புளியம்பாடி, புளியஞ்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் புளியஞ்சேரி - திருப்புறம்பியம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து சுவாமிமலை மற்றும் கும்பகோணத்துக்கு செல்ல வேண்டும். இங்கு தெருவிளக்கு அமைக்க வேண்டும் என சுற்றியுள்ள கிராம மக்கள் மயிலாடுதுறை எம்பி பாரதிமோகனிடம் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை எம்பி பாரதிமோகன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சத்தை ஒதுக்கி புளியஞ்சேரி -திருப்புறம்பியம் பிரதான சாலையில் உயர்மின்கோபுரம் அமைத்து, அதனை ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் சோழபுரம் க. அறிவழகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோவி. மகாலிங்கம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் அழகு.த. சின்னையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், மீன் ராஜேந்திரன், பகவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT