தஞ்சாவூர்

நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோயிலில் நாளை நவகோ பூஜை

DIN

நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஏப். 18-ஆம் தேதி சகஸ்ர தீபம்,  நவகோ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.
நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன்,  மார்க்கண்டேயர்,  சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்திபெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். 
சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, ஏப்ரல் 18 ஆம் தேதி இக்கோயிலில் காலை மூலவர்,  உற்சவர்,  தாயார் திருமஞ்சனமும்,  மாலை 5 மணிக்கு நவகோபூஜை, சகஸ்ர தீபமும் ஏற்றி சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாத பெருமாள் கைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT