முகப்பு
தஞ்சாவூர்

பாலியல் கொடுமையைக் கண்டித்து  மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பாலியல் கொடுமைகளைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மகளிர் காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:51 am IST
பகிர்:

பாலியல் கொடுமைகளைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மகளிர் காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இதற்காக மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  பாலியல் படுகொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிபாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மகளிர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர் ரேவதி ஷாக்கிலோ தலைமை வகித்தார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், ராஜ்குமார், கோட்டத் தலைவர்கள் ஷாக்கிலோ, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.