தஞ்சாவூர்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

DIN


தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல் நிலைப்பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் சந்தித்துக் கொண்டனர்.
கடந்த 1986 - 1992 காலகட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் தற்போது சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் தகவல் தொழில்நுட்பம், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசுப் பணி, வழக்குரைஞர், காவல் துறை, தொழிமுனைவோர், கூட்டுறவுத் துறை என பணியாற்றி வருகின்றனர். இதில் படித்த மாணவர்களை கட் செவி அஞ்சல், முக நூல், சுட்டுரை போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இரு மாதங்களாக ஒருங்கிணைப்பாளர் பி. காமராஜ் ஒருங்கிணைப்பு பணி மேற்கொண்டு வந்தார்.இதைத்தொடர்ந்து, அப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை 50-க்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடினர். அப்போது பள்ளியில் படித்த காலத்தில் நிகழ்ந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர், கேக் வெட்டியும், சுயபடம் எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். இதையடுத்து, வருகிற கல்வியாண்டு முதல் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவின்போது சிறந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT