தஞ்சாவூர்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 30 பேர் மீது வழக்கு

DIN

தஞ்சாவூரில் சனிக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி நிர்வாகி உள்பட 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிக்க வலியுறுத்தியும் தஞ்சாவூர் ரயிலடியில் இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் சிவ. சுப்பிரமணியன் உள்பட 30 பேர் மீது மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT