தஞ்சாவூர்

ஒக்கநாடு கீழையூர் அரசுப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

DIN


ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆண்டாய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சாந்தா அண்மையில் பதவியேற்றார். அவர் முதன்மை கல்வி அலுலவராக பதவியேற்று, முதல் ஆய்வாக இந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆண்டாய்வில் முதன்மை கல்வி அலுவலர் சாந்தா தலைமையில் ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலர் காமராஜ், பின்னையூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவாளி, துணை ஆய்வாளர் அறிவொளி, ஒரத்தநாடு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சிவபாலன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இப்பள்ளியில் தேசிய அளவில் கோ- கோ போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்ற மாணவி சந்தியா, குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் பங்கேற்ற மாணவி செந்தமிழ், கோ-கோ போட்டியில் மாநில அளவில் பங்கேற்ற மாணவிகள் ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் காமராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து, ஒரத்தநாடு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் வட்டாரத் தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் முதன்மை கல்வி அலுவலர், மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு சால்வை அணிவித்தனர். இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைராஜ், உடற்கல்வி ஆசிரியர் நந்தல். இராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT