தஞ்சாவூர்

சர்வதேச கராத்தே: மாணவர்களுக்குப் பாராட்டு

DIN


: சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை நிகழ்த்திய பட்டுக்கோட்டை மாணவர்கள் சனிக்கிழமை பாராட்டப்பட்டனர்.
மலேசியாவில் டிச.1, 2-களில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தமிழ்நாடு சார்பில், இஷ்ன்ரியு கராத்தே தேசியப் பயிற்சியாளர் என். நாடிமுத்து தலைமையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 7 மாணவர்கள், 3 மாணவிகள் என 10 பேர் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தினர்.
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 9 வயதுக்குள்பட்ட என்.ஏ. கமலேஷ், கே. பிரதீமா ஆகியோர் சண்டை பிரிவில் தங்கமும், 18 வயதுக்குள்பட்ட கட்டா பிரிவில் ஆர். ராகுல் பிரியன் தங்கமும், 11 வயதுக்குள்பட்ட சண்டை பிரிவில் என்.ஏ. முகேஷ் வெள்ளியும், 12 வயதுக்குள்பட்ட கட்டா மற்றும் சண்டை பிரிவில் என். சிம்லாதேவி வெண்கலமும், 13 வயதுக்குள்பட்ட கட்டா பிரிவில் கே. விக்னேஷ் வெள்ளியும், 14 வயதுக்குள்பட்ட சண்டை பிரிவில் எச். ஹார்டின் வெள்ளியும், 14, 17, 19 வயதுகளுக்குள்பட்ட சண்டை பிரிவுகளில் எம்.கே. செளமியா, வி. நரேன்பாலாஜி, எஸ். நவின்பிரகாஷ் ஆகியோர் வெண்கலத்தையும் வென்று சாதனை நிகழ்த்தினர். தமிழ்நாட்டுக்கும், பட்டுக்கோட்டைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், பயிற்சியாளர் என். நாடிமுத்துவையும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ். கணேசமூர்த்தி சனிக்கிழமை பாராட்டி, வாழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT