நாம் தமிழர் கட்சியினர் ஆலோசனை
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் நாம் தமிழர் கட்சி, மதிமுக, தாளாண்மை உழவர் இயக்கம், காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம், மக்கள் விடுதலை
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் நாம் தமிழர் கட்சி, மதிமுக, தாளாண்மை உழவர் இயக்கம், காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம், மக்கள் விடுதலை அமைப்பு உள்ளிட்டவை சார்பில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், நெய்குன்னம் பகுதியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தினரால் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை அந்த இடத்தை விட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் பிப் 28ஆம் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முன் கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தாளாண்மை உழவர் இயக்கம் கே. திருநாவுக்கரசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், மதிமுக மணிவண்ணன், காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.