தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் மேலாண்மைக் கருத்தரங்கம்

DIN

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சார்பில் வணிகத் தொழில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மையில் சம கால பிரச்னைகள் என்ற தலைப்பிலான ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
டைம்லேர் இந்தியா வணிக வாகனப் பிரிவின் மனித வளப் பிரிவு மேலாளர் உமாநாத் குமார், நியூசிலாந்து ஒடேகா பல்கலைக்கழகப் பேராசிரியர் ராகேஷ் பாண்டே, மலேசியாவின் வாவாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாலகிருஷ்ணன் முனியப்பன், சென்னை போர்ட் மோட்டார்ஸ் நிறுவன தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பகிர்ந்தளிப்புப் பிரிவின் பொது மேலாளர் சங்கர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேசினர். இதில், 70-க்கும் அதிகமானோர் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தனர். சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் எஸ். வைத்திய சுப்பிரமணியம், மேலாண்மைத் துறைத் தலைவர் வெ. பத்ரிநாத், ஒருங்கிணைப்பாளர் வே. விஜய் ஆனந்த், பேராசிரியர்கள் அருண்குமார், ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT