தஞ்சாவூர்

விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு அலங்காரம்

DIN

கோயில்களில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை செந்தூரக் காப்பு சாத்தப்பட்டு  வழிபாடு நடத்தப்பட்டது. 
கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகிலுள்ள இக்கோயிலில் வறட்சி நீங்கி நீர்வளம் வேண்டியும், உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், அமாவாசையை முன்னிட்டும், கோயில்களில் தொடர்ந்து தீவிபத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ஆஞ்சநேயருக்கு செந்தூரக் காப்பு சாத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டில்  1008 ராம நாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனைகளும்  செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்து  வழிபட்டனர். மேலும், பல பக்தர்கள் நேர்த்திக்கடனாக மட்டை தேங்காய்களை ஆஞ்சநேயர் காலடியில் வைத்து வழிபட்டனர்.  பக்தர்களுக்கு ராமன், மோகன் பட்டாச்சாரியார்கள் அருள் பிரசாதம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT