தஞ்சாவூர்

கடலோர மேலாண்மைத் திட்டம்:ஆலோசனை, ஆட்சேபனை தெரிவிக்கலாம்

DIN

தமிழகத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்டம் குறித்த ஆலோசனைகள், ஆட்சேபனைகள் இருந்தால் ஏப். 6ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின்படி, சுற்றுச்சூழல், வனம், பருவ நிலை மாற்றம் துறையின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தமிழகத்துக்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறைக்கு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் என்ற மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு இத்திட்டம் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011 வழிமுறைகளின்படி தமிழகத்துக்கான வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள், பொதுமக்களின் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை கேட்டறிய சுற்றுச்சூழல் துறையின் ‌w‌w‌w.‌e‌n‌v‌i‌r‌o‌n‌m‌e‌n‌t.‌t‌n.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்திலும் மற்றும் இத்துறையின் என்விஸ் மையத்தின் ‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌t‌n‌e‌n‌v‌i‌s.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்திலும் வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் பிப். 19-ம் தேதி வெளியிடப்பட்டது.
எனவே, நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் குறித்த தங்களுடைய ஆலோசனைகள், ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால், இத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத்து மூலம் இத்துறைக்கு ஏப். 6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT