தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 10 மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் நகரிய உதவி செயற்பொறியாளர் அ. கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அருளானந்த நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி. நகர், மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர், சாந்தி நகர், பூக்காரத் தெரு, கோரிகுளம், நிர்மலா நகர், பழைய வீட்டுவசதி வாரியம், பெரியார் நகர், இந்திரா நகர், எழில் நகர், நடராஜபுரம், தெற்கு டி.பி.எஸ். நகர், மங்களபுரம், கண்ணன் நகர், பாலாஜி நகர், ஜெ.ஜெ. நகர், பொன்நகர், பாண்டியன் நகர், சுந்தரம் நகர், எல்ஐசி காலனி விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.