ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு
ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து...
காபூல்: ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 9.30 மணியளில் நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. அட்சரேகை 36.545, தீா்க்கரேகை 71.409, பூமிக்கடியில் 140 கி,மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவானது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நிலநடுக்கத்தினால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ஆப்கானிஸ்தானில் கடந்த 12-ஆம் தேதி 150 கிலோமீட்டர் ஆழத்தில் 4.6 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, ஏப்ரல் 6 ஆம் தேதி, வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
"ஆப்கானிஸ்தான் மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கிறது; இந்தச் சவாலான காலகட்டத்தில் மனிதாபிமான உதவிகளையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது," என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
An earthquake of magnitude 4.6 struck Afghanistan on Wednesday, as per a statement by the National Center for Seismology (NCS).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.