தஞ்சாவூர்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  பருத்தி ஏலம் தொடக்கம்

DIN

கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிகழாண்டிற்கான பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை தொடங்கியது.
இதில் கடலங்குடி,  பூந்தோட்டம்,  ஆதனூர்,  திருவிடைமருதூர், சேங்கனூர்,  மகாஜனகுடி,  அகராத்தூரை சேர்ந்த விவசாயிகள் 90 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை சேலம்,  கும்பகோணம், செம்பனார்கோவில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த பருத்தி வியாபாரிகள், ஏலத்தில் எடுத்தனர் வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்திக்கு விலை நிர்ணயித்து ஏலப்பெட்டியில் போட்டனர். 
இதில் ஒரு குவிண்டாலுக்கு  அதிகபட்ச  விலையாக ரூ. 5,100-ம்,   சராசரி விலையாக ரூ. 4,850, குறைந்தபட்ச விலையாக ரூ 4 ,679 ம் விலை முடிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT